லங்கா சதொச நிறுவனம், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்பட்டு 850 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 120 ரூபாயினால் குறைக்கப்பட்டு தற்போது 375 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயினால் குறைக்கப்பட்டு 445 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளைப்  பூண்டின் விலை  15 ரூபாயினால் குறைக்கப்பட்டு 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலையானது  10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *