பிரித்தானியாவுக்கு விசிட்டர் விசா (Visitor Visa) மூலமாக செல்பவர்களுக்கு சொந்த நாட்டில் சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசா நடைமுறை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசிட்டர் விசா (Visitor Visa) மூலமாக பிரித்தானியா வருபவர்கள், தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்க வேண்டியுள்ள சில பணிகளை (Remote work) பிரித்தானியாவிலிருந்த வண்ணம் தொடர முடியும்.
இதன்மூலமாக சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருபவர்கள் சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர வழிவகை செய்யபட்டுள்ளது.
அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் சுற்றுலா போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வரும்போது அவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.