திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை கட்டுவது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அப் பிரதேசத்தில் 99 வீதமானவர்கள் தமிழர்கள் எனஅக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன் தாம் கூறும் பிரதேசத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை நாம் முயற்சி செய்து தவிர்க்க வேண்டும் எனவுக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அது நீடித்தால் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அதற்காக பௌத்த நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படக் கூடாது என்று தாம் கூறவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டுடன் கணிசமான அபிவிருத்தியை நோக்கும் போது சமூகச் சூழலை சீர்குலைக்கக் கூடாது என்றும் அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.