சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம்: உச்ச நீதிமன்று உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள், வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் காட்சிப்படுத்தப்பட்டது.

நீதிமன்ற அறையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை காட்சிப்படுத்தி உரிய ஆதாரங்களை பதிவு செய்த மேல் நீதிமன்றம், இந்த வழக்கில் சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிடுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி ஹரிபிரியா ஜயசுந்தர விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நீதிமன்ற அமர்வு மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த (தலைவர்), அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *