காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றிற்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றி வளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடிப்படையினர் சந்தேக நபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், கணினி மற்றும் பிரிண்டர், தட்டச்சு இயந்திரங்கள்,வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கூடிய 30 பத்திரங்கள், 12 தேசிய அடையாள அட்டைகளின் 12 பிரதிகள் என்பனவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.