இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்றும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மதிமுகவின் 75 சாரம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மொடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக கொடுத்துள்ளார். மதிமுகவுக்காக உழைக்கும் திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா கூட்டணி தான் வெற்றியடையும். இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு. இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தான் தமிழ் இனத்தின் முதல் எதிரி ஆவார்.
கச்சத்தீவு என்பது ராமநாதபுர மன்னருக்கு சொந்தமானது. அன்றைய காலத்தில் இந்திய அரசு கச்சத்தீவை கொடுத்த போது கலைஞர் கருணாநிதி முழுமையாக எதிர்த்தார்.
கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தீப்பெட்டி சின்னத்தை தேர்ந்தெடுத்தோம். சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி செய்துவிட்டது” என்றார்.