இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
அதற்கமைய, இந்திய நிதியமைச்சின் கீழுள்ள, வெளிநாட்டு வர்த்தக பணிப்பாளர் நாயக அலுவலகத்தின் அனுமதியின் அடிப்படையில் 10,000 மெட்ரிக் தொன் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்த தடை நீக்கமானது, தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இலங்கை மக்களுக்கு உதவியா இருக்குமெனவும், அண்டை நாட்டுக்கு முன்னுரிமை எனும் இந்தியாவின் கொள்கையை இது வலியுறுத்துவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.