64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவச்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது  இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்திய  போராட்டக்காரர்கள், தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைத்  தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதே வேளை  இப் போராட்டம் காரணமாக இன்றும், நாளையும்  மீன் பிடிக்கக்  கடலுக்குச்  செல்லப்  போவதில்லை எனவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *