24,379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்வெட்டு நல்லூரில் திறந்துவைப்பு!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் ஆரம்பமானது. இதனையொட்டி நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நேற்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. 

இதன்போது பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 மாவீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *