16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (30) இம்முறை நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டிகளாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடகியுள்ளது.
இதில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் 9 போட்டிகள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் நடப்பு ஆசிய கிண்ண சம்பியன் இலங்கை அணியில் உபாதை காரணமாக சுழற்பந்து நட்சத்திரம் வணிந்து ஹசரங்க, மின்னல் வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் ஆசிய கிண்ண இலங்கை குழாமில் இணைக்கப்பட்டவில்லை.
ஆசிய கிண்ணத்திற்காக உத்தியோகபூர்வமாக இலங்கை குழாம் அறிவிக்கப்படாவிட்டாலும் மிக மிக நம்பகமான செய்தி வட்டாரங்களின் படி இலங்கையின் ஆசிய கிண்ண குழாம் இவ்வாறாக அமையலாம்…
1. தசுன் ஷானக (தலைவர்)
2. பெத்தும் நிஸ்ஸங்க
3. திமுத் கருணாரத்ன
4. குசல் ஜனித் பெரேரா
5. குசல் மெண்டிஸ்
6. சரித் அசலங்க
7. சதீர சமரவிக்ரம
8. தனஞ்சய டி சில்வா
9. துஷான் ஹேமந்த
10. துனித் வெல்லால்லகே
11. மஹீஷ் தீக்ஷண
12. பிரமோத் மதுஷான்
13. கசுன் ராஜித
14. தில்ஷான் மதுஷங்க
15. மதீஷ பத்திரண
எதிர்வரும் 31ஆம் திகதி வியாழனன்று இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.