இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.