யாழில், பேரனுக்கு தாத்தா அளித்த சிறிய ரக முச்சக்கர வண்டி பரிசு!

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார்.

பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் பூட்டி ஓட வைக்க முயற்சிக்கவில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார் ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கியவரை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *