சண்டிலிப்பாயில் – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், பிரதேசத்தில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (25) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தந்தை இரண்டாவது திருமணம் செய்த நிலையில் சித்தியுடனே இவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ஆம் மாதம் அவரது மாமா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *