இந்தோனேஷியாவில் கடும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு – எழுவர் மாயம்!

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் காணமல் போயுள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை முகாமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்ததில் சுமார் 20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த நிலச்சிரிவில் மலையிலிருந்து பாரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தள்ளதுடன், பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன.

இதில் 14 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ள நிலையில், 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள நதிக்கரையோர கிராமங்களிலுள்ள மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், மின்சாரத் தடை, வீதிகளில் ஓடும் வெள் நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் பெரும் சிரமத்துக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *