பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள வவனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று முல்லைத் தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது
ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் இணைந்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வவுனியா நகரசபைக்கு முன்பாக போராட்டம் நடாத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தையடுத்து வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இவர்களை
எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்துக்கு முன்பாக ஆரம்பமானது.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சென்று நிறைவு பெற்றிருந்தது.

