வடமாகாணத்துக்கு மூன்று நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விஜயம்:

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

உலங்கு வானூர்தி மூலம்  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைப்பதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் பயிற்சி பிரிவையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

கிளிநொச்சி மருத்துவமனையில் பெண்கள் சுகாதாரப் பிரிவையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். வவுனியா மாவட்ட மருத்துவமனையில் இதயநோய் பிரிவையும், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புதிய விடுதியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

மேலும் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *