வடக்கு லண்டனில் குடியிருப்பு தீக்கிரை – இருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன் எரிந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய கோர சம்பவம் நேற்று முந்தினம் (ஞாயிறு) இரவு சுமார் 10.25 மணியளவில் நடந்துள்ளது. தகவலையடுத்து 6 தீயணைக்கும் வாகனங்களில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி 2 மணித்தியாலங்களில் தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

குடியிருப்பின் உள்ளே மீட்கப்பட்ட இருவர், தீயில் சிக்கி சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் தொடர்பில் பொலிசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, வித்தியாசமான வாசனை உணர்ந்ததை அடுத்தும், அலறல் சத்தம் கேட்டதாலையே பலரும் குடியிருப்பின் வெளியே வந்த போது குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியுள்ளதை கண்டுள்ளனர்.

இதனையடுத்தே சுமார் 9 நபர்கள் அவசர அழைப்பு இலக்கமான 999 இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *