வடக்கில், 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வடமாகாணத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 2 பேரும் , மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 6 பேரும் , வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 5 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 8  பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

“நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *