லிபியாவில் சக்திவாய்ந்த புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக”, 2,000 க்கும் அதிகமானோர் இதுவரையில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பெரும் வெள்ளம் பல கிராமங்களை அடித்துச் சென்றதுடன் வட ஆபிரிக்க நாட்டின் கிழக்கில் பல கடற்கரை நகரங்களில் குடியிருப்புகளை மொத்தமாக சிதைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த லிபிய இராணுவத்தைச் சேர்ந்த 7 வீரர்களை காணவில்லை என லிபிய அரசாங்கம் அறீவித்துள்ளது.
இந்த நிலையில், கிழக்கு லிபியாவின் நகரங்களான பெங்காசி, சூசே, டெர்னா மற்றும் அல்-மார்ஜ் ஆகிய பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.