ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகின்றன.
இராணுவம் தாக்குதலை முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.பாரிய தீயை காண்பிக்கும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார் – பெரும் வெடிப்பு சத்தங்களை அந்த வீடியோவில் கேட்க முடிகின்றது.
நான்கு இலுசின் 76 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்படாத ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ்கோவ் நகரம் உக்ரைனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.