இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2015 முதல் 2022 வரை இலங்கை படையினரால் தாக்கப்பட்ட பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய சித்திரவதைகளுக்குள்ளான 123 தமிழர்களின் விபரங்களை அடிப்படையாக வைத்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழர்கள், காணாமல்போதல், சித்திரவதை செய்யப்படுதல், பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுதல் 2022 முதல் 2025 என்ற இந்த அறிக்கை 2022 இல் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற பின்னர் 11 தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டனர் என குற்றம்சாட்டியுள்ளது.