நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.