மாவிலாற்றில், மதகுக்கு அருகில் இருந்து சில ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!

சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாறு மதகுக்கு அருகில்  பழைய ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, கண்டுபிடிக்கப்பட்ட இராணுவ  ஆயுதங்களில்  T-56  துப்பாக்கிக்கான 22  ரவைகள், இரண்டு மகசீன்கள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் T-56 துப்பாக்கியின் ஒரு பகுதி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *