இந்தியாவின் 78வது சுதந்திர தினமான இன்று (15) காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை என்று பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
அவர் அங்கு ரையாற்றுகையில்,
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அவர்களே நமக்கு சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தனர்.
காலனி ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் இந்தியா சிக்கித் தவித்தது. அடிமைத்தன மன நிலையை கைவிட வேண்டிய தருணம் இது. 40 கோடி இந்தியர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினர். அவர்கள் சுதந்திரத்தை நனவாக்கினர். இப்போது 140 கோடி பேரும் இணைந்து வளர்ந்த இந்தியாவை சாத்தியமாக்குவோம்.
விவசாயிகளும் இராணுவ வீரர்களும் நாட்டை பாதுகாக்கவும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்.
ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பலன் பெறுகின்றன. சுவாச் திட்டம் மூலமாக இரண்டரை கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் பரிந்துரைகளும் கருத்துகளும் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளோம். பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் நாடு துணை நிற்கும். என்றார்.