நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்த்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துகை;கையில் இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டில் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. எனவே செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாதுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள் போஷாக்கு குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல் வரிகொள்கை காரணமாக நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம் மருந்து மோசடி இடம்பெறகின்றது. இவற்றை கடந்து மக்களுக்க சிறந்த வாழ்க்கை முறைமையை ஏற்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தினையே எதிர்ப்பார்த்துள்ளனர்” என ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.