புதிதாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன உதிரிப்பாகங்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து அவற்றை வைத்து உள்நாட்டில் தரமற்ற வாகனங்களாக ஒழுங்கமைத்து அவை போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவாறு தயாரிக்கப்பட்டு போலி ஆவணங்களுடன் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜீப் ரக வண்டிகள் குருணாகல் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு குருணாகல் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் இந்த வாகனங்களை கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு இறக்குமதி செய்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களுமே போலியானவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.