மக்கள் ஆணை இல்லாதவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குற்றவாளிகளுடன் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதனை பயன்படுத்தி கட்சித் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர் என அக்கட்சியின் பிரதம அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலக்கியவர்களோடு கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் சஜித் பிரேமதாச தலைமையிலான பாரிய கூட்டணியில் தாம் போட்டியிடவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களும் தம்மோடு இணைந்து செயற்பட்டு வருவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.