புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறை – குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவிப்பு:

புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது.

அதேவேளை இரண்டு வருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 300 அமெரிக்க டொலர்களாகவும்,10 வருடங்களுக்கான நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 1000 அமெரிக்க டொலர்களாகவும் அறவிடப்படவுள்ளது.

மேலும் இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும்  குடியகல்வுத்  திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *