2009 இல்இ, லங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா ஐ.நா முன்றலில் தன் உடலுக்கு தீயிட்டு தியாக மரணமடைட்ட “ஈகப்பேரொளி முருகதாசனுக்கு” பிரித்தானிய தலைநகர் லண்டனில் நினைவு வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈகப்பேரொளி முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடமான Holders hill road, london, NW7 1NB இல் அமைந்துள்ள நினைவுக் கல்லறையில் மேற்படி நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற உள்ளது.
அதே வேளை ஈழ விடுதலைக்காகவும், தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் தியாக மரணமடைந்த ஏனைய 26 தியாகிகளின் உருவப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலிக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வுகள் 12-02-2024 திங்கள் கிழமை அன்று காலை 11:30 இல் இருந்து மதியம் 12:30 வரை இடம்பெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.