“தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக” ஹமாஸ் போராளிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மோசமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதலில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது.
இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்பட்டிருந்த வெண் பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வெண் பொஸ்பரஸ் குண்டுகள் நெருப்புக் கோளமாக வெடிப்பவை. சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்வதோடு, மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.