இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஸவும் இன்று(10) முற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சுமந்திரனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நாமல் ராஜபக்ஸ சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இணைந்துகொண்டிருந்தார்.
தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஸ இந்த சந்தர்ப்பத்தில் கூறியதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.