வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபா வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும், அனைத்து சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.