நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை:

முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பெரும் வல்லரசுகள் முயற்சித்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் எந்தவொரு இராணுவ ஒத்திகைக்கும் இலங்கை ஆதரவளிக்காது எனவும் அவார்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் உரையாடல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள பல நாடுகள், நல்வாழ்வு மற்றும் வளர்ச்சியை சமரசம் செய்யும் பெரும் சக்திகளுக்கு இடையேயான சண்டைகளுக்கு இழுக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான அவுகஸ் aukus  உடன்படிக்கையை இராணுவகூட்டணி என வர்ணித்துள்ளதுடன் அது தேவையற்றது இதனால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *