நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக நேற்று (02) காலை காலமானார்.

நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக நேற்று (02) காலை காலமானார். அவருக்கு வயது 66.

இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நேற்று முந்தினம் சென்னை உலக சினிமா விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த அவர், நேற்று காலை காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

நடிகர் R.S.சிவாஜி 1981 ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார்.

மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், சத்யா, ஜீவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதன்பிறகு கமல்ஹாசனின் பல படங்களில் தவறாமல் இடம்பெற்றிருந்தார். 

நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். 

2021ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *