தோலிவியில் முடிவுற்ற ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போருக்கு மத்தியில் மூடிய அறையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில் கூட்டு அறிக்கை ஒன்றுக்காக ஒருமித்த நிலைப்பாட்டை பெறுவதில் தோல்வி அடைந்துள்ளது.

ஹமாஸ் மீது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதற்கு 15 அங்கத்துவ நாடுகளுக்கும் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் அழைப்பு விடுத்தது.

“ஹமாஸ் தாக்குதலை குறிப்பிடத்தக்க நாடுகள் கண்டித்தன. ஆனால் வெளிப்படையாக அனைத்து தரப்பும் முன்வரவில்லை” என்று அமெரிக்க மூத்த இராஜதந்திரி ரொபர்ட் வூட் பாதுகாப்புச் சபை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

90 நிமிடங்கள் நீடித்த இந்தக் கூட்டத்தில் ரஷ்யா தலைமையிலான தரப்பினர், இது தொடர்பில் பரந்த அளவில் அவதானம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொதுவாக “பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்” என்று சீனா தெரிவித்துள்ளது.

பிரச்சினை தொடர்பில் மேலும் கூட்டங்களை நடத்த எதிர்பார்ப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *