மாத்தறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டுகளை தாண்டி நீர் மட்டம் உயர்ந்தால் அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என மாத்தறை மாவட்ட செயலாளர் வை.விக்ரமசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான சூழல் ஏற்படும் பட்சத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான முகாம்களில் உடனடியாக தஞ்சம் அடையுமாறு பிரதேசவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.