தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ரத்துச் செய்துள்ளார்.
இன்று மாலை 3மணிக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் கடந்த 11ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 6 மணியளவில் வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், அதற்கு சற்று முன்னதாக இந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், காரணம் ஏதும் முன்வைக்கப்படாமல் – இந்தச் சந்திப்பு நடைபெறாதென ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.