“தமிழ்நாதம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

தமிழ்நாதம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 

சித்திரை புத்தாண்டு ‘குரோதி’ வருடமானது 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளையைச் சேர்ந்த முன்னிரவு 8.15 மணிக்கு (இலங்கை, இந்திய நேரம்) பிறக்கிறது.

தமிழ் புதிய ஆண்டான ‘குரோதி’ வருடத்தில் சகல மக்களும் அனைத்து வித நன்மைகளையும் முன்னேற்றகரமான வாழ்க்கைச் சூழலையும் பெற்று, சிறப்புற வாழ இறைவனை பிரார்த்திப்போம். 

நாட்டில் மக்கள் அனைவரும் இன, மத, பேதமின்றி நல்லிணக்கத்தோடும் பெருங்குணப் பண்புகளோடும் மானுட ஒழுக்க நெறிமுறைகளோடும் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

நாடெங்கும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் அடையும் இன்பமும் களிப்பும் வாழ்நாள் முழுதும் தொடர புதிய ஆண்டு வழி சமைக்கட்டும்! 

அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *