கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இன்று மீன் பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் – கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மீனவர்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.