யாழில் (Jaffna) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா மண்டபத்தில் இன்று (13) மாலை இடம்பெற்றது..
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.