தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்று நவம்பர் 27ஆம் திகதி உலகம் முழுவதும் பரப்பப்பட உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக த டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்ய நோர்வேயை சேர்ந்த சர்வதேச புலிகள் வலையமைப்பு இந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதற்கு நோர்வேயில் உள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.