நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இதற்கான விசேட போக்குவரத்து திட்டங்கள் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரை மற்றும் செராமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். எதிர்வரும் 29 முதல் பெப்ரவரி 02 வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் இவ்வீதிகள் மூடப்படவுள்ளன.
பெப்ரவரி 03ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் வரை, காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரை மற்றும் செராமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் மீண்டும் மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.