சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை சந்தித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல சிவில் சமூகத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.