சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரினால் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. இந்த பிரேரணையில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.