வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று(14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மழைக்கும் மத்தியில் விநோதமான பட்டங்கள் பல பறக்கவிடப்பட்டன.
இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். ஆண்டுதோறும் பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்படும்.




