கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

கொழும்பு – முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பவத்தில் உயிரிழந்தவர் போதைப்பொருள் வர்த்தகரான படா ரஞ்சி என்று அறியப்படும் செந்தில் ஆறுமுகன் என்ற 40 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *