கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலி இருந்து இதுவரை 35 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளதோடு கையில் அணியப்படும் இலக்கத்தகடு ஒன்றும் , மணிக்கூட்டு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கேனர் இயந்திரம் மூலம் குறித்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என கடந்த இரண்டு தினங்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் நேற்றையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதன் தெளிவான முடிவுகளை நாளையதினமே (27) பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் (26) அகழ்வு பணி இடம்பெறாது விடுமுறை வழங்கப்பட்டு நாளையதினம் ஏழாவது நாளாக அகழ்வு பணி இடம்பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *