செங்கடலில் கிரேக்கத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்திய நிலையில் அந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹூத்திக்களின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டனின் பதில் தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு உடனடி அச்சுறுத்தலான நான்கு ஹூத்தி பலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக தற்காப்பு தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டது” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது ஹூத்திக்களுக்கு எதிராக ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் மூன்றாவது தாக்குதலாக உள்ளது.
முன்னதாக மோல்டா கொடியுடனான கிரேக்கத்திற்கு சொந்தமாக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்று இடம்பெற்றதை கடல்சார் அச்சுறுத்தல் முகாமைத்துவ நிறுவனமான அம்ப்ரி உறுதி செய்தது. இந்தக் கப்பல் இஸ்ரேல் சென்று திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.