இஸ்ரேலுல் – ஹமாஸ் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இ
இத்தகவலை காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஸாவின் அல் ஷிபா நகரிலுள்ள வைத்தியசாலையில், மந்தபோஷாக்கு, நீரிழப்பு மற்றும் பட்டினி காரணமாக 6 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் மரணங்களைத் தடுப்பதற்காக சர்வதேச ஸ்தாபனங்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா கோரியுள்ளார்.