காத்தான்குடியில் முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இஸ்லாமிக் சென்டர் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை முன்றலில் இன்று திங்கட்கிழமை (17) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.
ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் பங்கேற்பதற்காக பல மக்கள் அதிகாலை முதல் காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஒன்று கூடி தொழுகையில் கலந்து கொண்டனர்.
இதன்போது புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகையையும், அதனுபின்னரான கொத்பா பிரசங்கத்தினையும் அஷ்ஷெய்க். மௌலவி, அல்ஹாபிழ் எம்.ஏ. ஹாலிதீன் (பலாஹி) நடாத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தொழுகையில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களையும் இன்முகத்துடன் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.